நவநீதம் பிள்ளை ஒரு பூனை": அமெரிக்கத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

21.3.13

'இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை காலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்றது. கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி காலி வீதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் வரை சென்று நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் ' அமெரிக்காவின் தீர்மானங்கள் எமக்குத் தேவையில்லை", நவநீதம் பிள்ளை ஒரு பூனை", ' இந்தியாவின் றோவும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.யும் இதற்கு பின்னணி", 'நாம் யாருக்கும் அடிபணிய மாட்டோம்" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.(வீரகேசரி )

0 கருத்துக்கள் :