சிறிலங்கா தொடர்பான கொள்கை மாறிவிட்டது - அமெரிக்கா அறிவிப்பு

5.3.13

மனிதஉரிமைகளுடன் தொடர்புடைய விவகாரங்களுக்குப் பதிலளிப்பதில் முன்னேற்றத்தைக் காண்பிக்கத் தவறியதன் பின்னர், சிறிலங்கா தொடர்பான அமெரிக்க கொள்கை மாற்றம் கண்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான, அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் எச் போஸ்னர் இதனைத் தெரிவித்துள்ளார். சுதந்திரமான, சார்பற்ற, அமைப்பான வெளிவிவகாரச் சபையில் உரையாற்றிய அவர், “சிறிலங்காவில் 2009ல் நடந்த சம்பவங்கள் தயக்கத்தை அளித்தன. ஐ.நாவிலும் பிற இடங்களிலும், விசாரணை ஆணைக்குழுவொன்று உருவாக்குவதற்கான நகர்வுகளே இருந்தன. ஆனால் நாம் அதை ஏற்கவில்லை. எவ்வாறாயினும், கடந்த ஆண்டு, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்காவுக்கு அழைப்பு விடுக்கும் மிகவும் சிக்கலான தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்காவே கொண்டு வந்தது. சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்புகள் இருந்த போதிலும், அந்தத் தீர்மானத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. நாம் அதற்காக மிகப்பெரிய இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டோம். அது உண்மையிலேயே எமது கொள்கையில் பகுதியளவு மாற்றத்தைப் பிரதிபலித்தது. ஏனென்றால், சிறிலங்காவின் நிலையில் எம்மால் முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. அரசாங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நிறையவே ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. சிறிலங்கா அரசுடன் இறுக்கமான கலந்துரையாடல்களை நடத்தினோம். ஒருதொகுதி மனிதஉரிமை விவகாரங்கள் குறித்து எமது பிரதிச்செயலர்களில் ஒருவர் அங்கு பிரச்சினை எழுப்பினார். மீண்டும் தற்போதைய கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வருவோம். சவால்ளை எதிர்கொண்டுள்ள போதிலும், சிறிலங்காவுடனான நெருக்கடிக்குத் தீர்வு காணலாம் என்பதே எனது கருத்து” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :