இலங்கை, இந்து சமுத்திரத்தில் கடனில் மூழ்கும் நிலைமை

20.3.13

ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு, அரசாங்கம், சர்வதேசத்தின் ஊடாக அதிகளவில் கடனை பெற்று வருவதால், இலங்கை, இந்து சமுத்திரத்தில் கடனில் மூழ்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன் நிதியை விணாக செலவிடப்பட்டதால், திட்டமிடப்பட்ட எந்த திட்டங்களில் இருந்து பலனை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த கடனுதவியில் தரகு காகங்களின் பைகளுக்குள் பணம் சென்றது மாத்திரமே நடந்துள்ளது. இதனால் சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனை அடைப்பதற்காக அரசாங்கம் மக்கள் மீது வரி சுமைகளையும் அபராத தொகைகளையும் அதிகரித்துள்ளது எனவும் விக்ரமபாகு மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :