இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர ராமதாஸ் வலியுறுத்தல்

14.3.13

இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர் போராட்டத்தை அரசு ஒடுக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பேசிய அவர் இலங்கை மீது நடவடிக்கை கோரி ஐ.நா.கவுன்சிலில் பசுமை தாயகம் வலியுறுத்தும் என்றும், மார்ச் 18ல் ஐ.நா.கவுன்சிலில் பசுமை தாயகம் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :