உச்சகட்ட போரின் போது இலங்கைக்கு இந்தியா என்னென்ன உதவிகளை செய்துள்ளது??

20.3.13

இலங்கை தமிழரான ஏ.கணேசலிங்கம் என்பவர், இலங்கையில் நடைபெற்ற உச்சகட்ட போரின் போது இந்திய அரசு, இலங்கைக்கு என்னென்ன உதவிகளை செய்துள்ளது? என சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி - மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த கமிட்டியின் பரிந்துரைகளை மேற்கோள் காட்டி, கணேசலிங்கத்தின் சார்பாக மலேசியாவில் வசிக்கும் தமிழ் வழக்கறிஞர் ஒருவர், 'இந்த காலகட்டத்தில் இலங்கைக்கு இந்திய அரசு செய்துள்ள உதவிகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும்' என அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 40 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருநாட்டு அரசுகளுக்கும் பங்கு உள்ளது என்பதால் இந்தியாவின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டிய கடமை சி.பி.ஐ.க்கு உள்ளது. இந்திய குற்றவியல் சட்டங்களின்படி இந்தியாவில் வசிக்கும் ஒருவர், இந்தியாவிற்கு வெளியே குற்றச் செயல்களில் ஈடுபட்டால், இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்டு, இங்கேயே விசாரிக்கப்படலாம் என்ற விதி உள்ளதால் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளேன். விசாரணையின் முடிவுகளை 4 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :