இலங்கை விவகாரம்! கலைஞரை சந்திக்க ப.சிதம்பரம், அந்தோணி முடிவு?

17.3.13


ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தில் மாற்றம் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த இன்னும் காலஅவகாசம் உள்ளது. இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. திமுக எங்களுடன் கூட்டணியில் உள்ளனர். அவர்களுடன் இதுதொடர்பாக பேசுவோம் என்றார். இதனையடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து கலைஞரிடம் தெளிவாக எடுத்து கூறும் வகையில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் அந்தோணி ஆகியோர் அவரை சந்தித்து பேச உள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளன.

0 கருத்துக்கள் :