ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் உணர்வாளர் ஒருவர் தீக்குளிப்பு

4.3.13

ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் உணர்வாளர் ஒருவர் தீக்குளிப்பு இலங்கையில் போர்க்குற்றவாளி ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில் தமிழ் உணர்வாளர் மணி என்பவர் தீக்குளித்தார். கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளித்த நல்லவாடு கிராமத்தைச்சேர்ந்த மணி, பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார் என்ற செய்தி வந்துள்ளது . உயிருக்குப் போராடிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணி, தனித் தமிழீழம் அமைய வேண்டும்- இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக இந்த உலகம் அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும். இதேபோல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிதி கிடைக்காமல் ஊழல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துவிட்டனர். இதனால் ஊழலற்ற இந்தியா மலர வேண்டும். அன்னா ஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரது வலுவான லோக்பால் மசோதா கோரிக்கை நிறைவேறவும் எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும் என்றார். கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு நாம் தமிழர் கட்சியினர் உடனிருந்து சிகிச்சைகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இதற்கு முன் ராஜபக்சே இந்தியா வருகையை ஒட்டி விஜயராஜ் என்ற தானி ஓட்டுனர் தீக்குளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது ! இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ நாவில் இப்போது வரும் நிலையில் மணி தன்னைத் தானே எரியூட்டி உள்ளது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது . .

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இதற்காக எனது உயிரே முதல் வாக்காக இருக்கட்டும்” என தீக்குளித்த நபர் கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. -

0 கருத்துக்கள் :