மயங்கி சுருண்டு விழுந்தும், தனி ஈழம் வேண்டும் என உச்சரித்த உதடுகள்!

19.3.13

பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி சேலத்தில் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில் காலை 11.30 மணியளவில் இரண்டு மாணவர்கள் அந்த இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்தனர். ஆம்புலென்ஸ் வந்து அவர்களை மருத்துவமனைக்கு ஏற்றி சென்றது. அந்த நேரத்திலும் தனி ஈழம் வேண்டும் என அவர்களின் உதடுகள் உச்சரித்தபடியே இருந்தது. இதே போல பெரியார் பல்கலைகழக வாசலிலேயே பல்கலைகழக மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் செய்தி படம் இளங்கோவன்

0 கருத்துக்கள் :