சட்டக்கல்லூரி மாணவர்கள் பஸ் மறியல்

13.3.13

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் 4-ம் ஆண்டு, 5-ம் ஆண்டு படிக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை செங்கல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் ராஜபக்சேவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.


0 கருத்துக்கள் :