ஏழை மக்களின் வீடுகளில் யுத்தம் ஆரம்பித்துள்ளது : சாந்தினி கோங்காங்கே

25.3.13

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவுவதாக அரசு கூறுகின்ற நிலையில் தற்போது சாதாரண ஏழை மக்களின் வீடுகளில் யுத்தம் ஆரம்பித்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கோங்காங்கே தெரிவித்தார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரிப்பதனால் மக்கள் அன்றாடம் செத்துப்பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் பிறக்கின்ற குழந்தை முதல் வைத்தியசாலையில் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் இருக்கின்ற நோயாளி வரை இப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு தற்போது நட்டுமக்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நடுத்தர வருமானங்களை பெறும் குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இந்நிலையிலேயே நாட்டில் யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவுவதாக அரசு கூறுகின்ற ஆனால் தற்போது சாதாரண ஏழை மக்களின் வீடுகளில் யுத்தம் ஆரம்பித்துள்ளதென இவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :