மாணவர் போராட்டம் எதிரோலி: இலங்கை வீரர்களை நீக்க சூப்பர் கிங்ஸ் முடிவு

26.3.13

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டில் மாணவர் கூட்டமைப்பு மிகப்பெரிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டம் ஐ.பி.எல். போட்டிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நடை பெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று மாணவர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதனால் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று ஐ.பி.எல். அமைப்பை மற்ற அணிகளின் உரிமையாளர்கள் வற்புறுத்தினார்கள்.

ஆனால் போட்டிகளை சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற இயலாது என்று ஐ.பி.எல். அமைப்பை சேர்ந்த நிர்வாகியும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக செயலாளரும் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சனையில் தீர்வு ஏற்படும் வகையில் தங்கள் அணியில் உள்ள 2 இலங்கை வீரர்களை நீக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடாமல் இருக்கும் வகையில் இந்த 2 பேரையும் அணியில் இருந்து இந்த சீசனுக்கு நீக்குவது என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 13 இலங்கை வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இதில் பஞ்சாப் அணியை தவிர மற்ற 8 அணிகளில் இலங்கை வீரர்கள் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 இலங்கை வீரர்ககள் உள்ளனர்.

0 கருத்துக்கள் :