பேஸ்புக்கில் படம் அனுப்பிய பின் ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

3.3.13

நடுரோட்டில் திடீரென மணிக்கட்டில் வெட்டிக் கொண்ட வாலிபர், அதை படம் பிடித்து பேஸ்புக்கில் அனுப்பிக் கொண்டே பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.கோவா மாநிலம் பனாஜியில் ஜுவாரி பாலம் உள்ளது. இதன் கீழே ஆறு ஓடுகிறது. நேற்று முன்தினம் மாலை இந்த பாலத்துக்கு பைக்கில் வேகமாக வந்து 26 வயது வாலிபர் ஒருவர் இறங்கினார். தான் வைத்திருந்த கத்தியால் கை மணிக்கட்டில் ஆவேசமாக வெட்டி கொண்டார். அங்கிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. உடனே, அதை தனது செல்போனில் படம் எடுத்து பேஸ்புக்கில் அனுப்பினார். வாலிபரின் இந்த செயலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திகைத்தனர்.அடுத்த சில நொடிகளில் பாலத்தின் முனைக்கு ஓடிய அவர், அதன் மீறி ஆற்றில் குதித்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை பிடிக்க செல்வதற்குள் இந்த சம்பவம் நடந்து விட்டது. உடனே, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து, நீச்சல் வீரர்களின் உதவியுடன் வாலிபரை மீட்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இரவு 9.30 மணியளவில் சடலம் மீட்கப்பட்டது.பேஸ்புக் மூலம் நண்பரான யாராவது ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து தோற்ற தால், வாலிபர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

0 கருத்துக்கள் :