எந்த ஆட்சி வந்தாலும் எங்கள் நிலைப்பாடு ஒன்றுதான்: கருணாநிதி

29.3.13

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கேள்வி :- இலங்கையில் நடைபெறவுள்ள “காமன்வெல்த்” மாநாட்டை வேறு நாட்டில் நடத்துவதற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேட்டி அளித்திருக்கிறாரே? பதில் :- நாம் பாராட்ட வேண்டிய ஒரு அறிவிப்பு இது. ஆனால் அவர் இந்த அறிவிப்பை தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்திருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமில்லாமல், அவருடைய கட்சியின் பொது கருத்தாக அமையுமேயானால், அப்போது தான் நம்முடைய பாராட்டு முழுமை பெறும். கேள்வி :- ஈழத்தமிழர் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையிலிருந்து விலகியதோடு, கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவையும் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பிறகும் மத்தியில் உள்ள ஆட்சியைக் கவிழ்க்க துணை போக மாட்டோம், வெளியிலிருந்து ஆதரவு என்றெல்லாம் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றனவே; அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

0 கருத்துக்கள் :