தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இலங்கை

28.3.13

இலங்கை உலகில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவாக மாறியுள்ளதென எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதென ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

0 கருத்துக்கள் :