அதிர்ச்சியான காவல்துறை வேல்முருகன் போராட்டம்

19.3.13

வேலூர் மாநகரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தை தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள் முற்றுகையிட்டனர்.

தனி ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்து, இராஜபக்சேவை தண்டிக்க வேண்டும் என கேட்டு வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மணி நேரம் கோஷமிட்டனர்.

வேலூரில் அவ்வளவு தொண்டர்கள் வருவார்கள் என காவல்துறையும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஐம்பதுக்கும் குறைவான போலிசார் இரண்டு வேன்களில் வந்து போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய காத்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத வண்ணம் இரண்டாயிரம் தொண்டர்கள் வந்தால் அவர்களை கைது செய்ய முடியாது என்பதால் அவர்கள் போராட்டம் நடத்தும் வரை பாதுகாப்பு தந்துவிட்டு போராட்டம் முடிந்ததும் கலைந்து சென்றனர்.

போராட்டத்தின் போது பேசிய வேல்முருகன், தமிழ் இனத்தை அழித்த இராஜபக்சேவையும் அவரது சகோதரரையும் கைது செய்ய வேண்டும், சர்வதேச விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்தி தனி தமிழ் ஈழம் அமைக்க வேண்டும். அப்போது தான் ஈழத்தில் தமிழ் இனம் நிம்மதியாக வாழ முடியும். இதனை இந்திய அரசு செய்ய நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றார்.

0 கருத்துக்கள் :