வட தென் கொரியா இடையே போர் மூளும் அபாயம்

12.3.13


வட கொரியாவும், தென் கொரியாவும் மாறி மாறி போர் ஒத்திகை நடத்தி வருவதால் இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. கடந்த பிப்ரவரி 12ந் தேதி வடகொரியா தனது 3வது அணுகுண்டு சோதனையை நடத்தியது. மேலும், தென் கொரியாவுடன் ஏற்பட்டிருந்த அமைதி உடன்படிக்கை வட கொரியா முறித்து கொண்டதால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமது நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா பெரிய அளவிலான போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. அதே சமயம் தென் கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா மிகப் பெரிய ராணுவ அணி வகுப்பை நடத்தி காட்டியது. இந்த அணி வகுப்பில் கலந்து கொண்ட லட்ச கணக்கான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் தென் கொரியாவோடு போருக்கு தயாராக உள்ளதாக உறுதி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் பொம்மை ஆட்சியாளர்களும் தங்களுக்கு வர இருக்கும் ஆபத்தை உணராமல் விஷ பரீட்சையில் ஈடுபடுவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :