இந்திய தூதுவராலயம் அடாவடி இலங்கை குற்றச்சாட்டு!!

13.3.13

இலங்கையின் நீதிமன்ற கட்டளையையும் மீறி இந்திய மீனவர்களை இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுவித்தமை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. அண்மையில் புத்தளம் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களுமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய உயர்ஸ்தானிகரகம் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த மார்ச் மாதம் 3ம் திகதி இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த மாதம் 18ம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட் டிருந்தது.எனினும் நீதிமன்ற தடுப்பு காவலை தாண்டி இலங்கை அரசுக்கு கடும் நிர்ப்பந்தம் வழங்கி மீனவர்களை இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுவித்தமையே பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் செயற்பாட்டால் அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :