தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் மாணவர்களே !!!

23.3.13


இன்று வித்யா என்றொரு மாணவி தன்னையே ஈழத்திற்காக கொன்று கொண்டாள்.. இதன் பின்னிருக்கும் காரணங்கள் சிலதான்… இது வரை இயங்கி வந்த தமிழ் தேசிய இயக்கங்களின் குறைபாடுகளே… தொடர் இழப்புகள்…. உண்ணாநிலை போராட்டம் ,என தொடங்கும் இன்ன நிலை போராட்டங்களை அரசுகள் கண்டு நடுங்குவதில்லை..மாறாக இத்தகைய போராட்டங்களை ,போராட முன் வரும் இளைய தலை முறையை உளவியல் ரீதியாக குடும்பம் மற்றும் தொழில்,படிப்பு என பல முகங்களில் அவர்களை பயமுறுத்தி மன ரீதியாக சிதைக்கின்றனர்.. இத்தகைய போராட்டங்களில் ஓரளவேனும் எழுச்சி ஏற்ப்பட்டாலும் அதை அவர்களின் குடும்பத்தோடு சிதைக்கும் வேலையை பார்ப்பதால் மாற்று புரியாமல் தவிக்கின்றனர் .. ஆயுத வழியையோ ,அல்லது எதிரியை அழித்து மாழ்வதோ இவர்களால் முடியும் என்றாலும் அதற்க்கான அமைப்பியல் அடித்தளமோ..அதன் பின்னான தனது குடும்பத்தின் மீது கவிழும் அரச பயங்கர வாதத்திற்கும் அஞ்ச வேண்டிய சூழலில் தமிழ் தேச மக்கள் இருக்கின்றனர்.. தத்துவார்த்த புரிதலுடன் இயங்கிய முத்துகுமார்,மற்றும் செங்கொடி போன்றவர்களின் தீக்குளிப்பில் இருந்த புரிதல்..மற்றவர்களுக்கு இல்லாமல் அக்கறையின்,அல்லது மன உறுதி குலைவுகளால் நேர்கின்றன இத்தகைய கொடைகள்… இயக்கங்களும் அடையாள போராட்டங்களின் மூலம் காலையில் சிறை சென்று மாலையில் மீளும் குயுக்தியை நோக்கமாக கொண்டிருப்பதால் சிறை,அடக்குமுறை அனுபவங்களை மாணவர்கள் நேரடியாக காணுறும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது…அதானால் அவர்கள் இறங்கி செய்ய முடியாமல் தன்னையே வருத்தி கொள்ள துணிகின்றனர்… வேறு காரணங்கள் இருந்தாலும் தோழர்கள் அலசலாம்.. தமிழீழம் வெல்லும் -தமிழ் தேசம் பிறக்கும்.. நன்றி- திரைப்பட இயக்குனர் கீரா-

0 கருத்துக்கள் :