அமெரிக்கத் தீர்மானம் போன்ற தாக்குதல்கள் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது

23.3.13

அமெரிக்கத் தீர்மானம் போன்ற தாக்குதல்கள் மூலம் எங்களை அச்சுறுத்த முடியாது என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்சே தெரிவித்துள்ளார். இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள குருனேகாலா வமாவட்ட ராணுவத் தலைமையகத்தில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பேசியதாவது: ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், எங்கள் மீதான தாக்குலாகும். இத்தாக்குதல், எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்தத் தாக்குதல்களால் எங்களை அடக்கவோ, தோற்கடிக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது. எனது அரசு மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் தவறான குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி உள்நோக்கமும் கொண்டவையாகும் என்று கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :