திமுக விலகியதால் மத்திய அரசுக்கு நெருக்கடி இல்லை

19.3.13

இலங்கை விவகாரத்தில், எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு பரீசிலனை செய்யவில்லை. இனியும் மத்திய அரசில் நீடிப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகமாக அமையும். எனவே, மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் விலகுகிறோம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார். மத்திய அரசு கூட்டணியில் இருந்து திமுக விலகியதால் அரசுக்கு எவ்வித நெருக்கடியும் இல்லை எனவும், இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வருவது குறித்து மற்ற அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மத்திய ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதை அடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது எனவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கவுண்டவுன் துவங்கியது எனவும் பா.ஜ., தலைவர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ., எப்போதும் தயாராக இருப்பதாக பா.ஜ., துணை தலைவர் முக்தர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்

0 கருத்துக்கள் :