சிங்கள அடி எப்படி இருக்கும்? : தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

18.3.13

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தைச்சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர், 'சிங்கள அடி எப்படி இருக்கும்" என்று சொல்லி கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதில், மூன்று மீனவர்கள் ராமன், பூமி, இலட்சுமிமணன் ஆகியோர் படுகாயம் அடைந்து மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக சேர்க்கப்பபடுள்ளனர். இந்திய எல்லைக்குள் இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துக்கள் :