தஞ்சை பெரியவ கோவில் -ல் இருந்து சிங்கள பிக்குவை வெளியேற்றிய தமிழர்கள் !

16.3.13

தமிழீழ இனப்படுகொலைகளுக்கு நீதிகேட்டு தமிழகம் கொந்தளித்துக் கொண்டுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆதாரித்து வழிநடத்திய சிங்கள புத்த பிக்குகள் தமிழ்நாட்டிற்கு 'சுற்றுலா' என்ற பெயரில் தொடர்ந்து உலா வருகின்றனர். தமிழ்நாட்டு சட்டமன்றம் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, இலங்கையுடனான சுற்றுலா உறவை முறித்துக் கொள்வதற்கும் முன்னிற்கின்ற போதுகூட, சிங்களர்கள் தமிழ்நாட்டிற்கு வருவது குறைந்தபாடில்லை. இன ஒதுக்கல் கொள்கையை அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடுகளும் தூதரக உறவை நீக்கி அந்நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை, விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட யாரும் போகத் தடை, அதே போல் அங்கிருந்து மக்கள் தங்கள் நாடுகளுக்கு வரத்தடை என்ற தடைகளை விதித்து செயல்படுத்தி வந்தன. ஆனால், இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிங்கள புத்த பிக்குகளும், சிங்களர்களும் தமிழ்நாட்டிற்க தங்கு தடையின்றி வந்து செல்ல இந்திய அரசு தொடர்ந்து அனுமதித்துக் கொன்றிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வரும் சிங்களர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவ்வப்போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு இன உணர்வாளர் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வந்தன. இதன் தொடர்ச்சியாக, இன்று(16.03.2013) தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த சிங்கள புத்த பிக்கு ஒருவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களால் வெளியேற்றப்பட்டார். அவர் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட காட்சிகள் சத்தியம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, தமிழக இளைஞர் முன்னணித் துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப் புலிகள் தோழர் அருள் மாசிலாமணி உள்ளிட்ட 12 பேர், தற்போது கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்



0 கருத்துக்கள் :