மரத்தில் ஏறி அகதிகள் போராட்டம் சிறப்பு முகாமில் பரபரப்பு

14.3.13

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ளவர்கள், தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்ற வலியுறுத்தி, மரத்தின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டில், இலங்கை அதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இதில், 38 பேர் உள்ளனர். அவர்கள் தங்களை திறந்தவெளி முகாமில், குடும்பத்துடன் தங்கியிருக்க அனுமதிக்க வலியுறுத்தி, நேற்று காலை, 10:00 மணிக்கு, பரமேஸ்வரன், ஜான்சன், சசிதரன், காண்டீபன், செல்வ குமார், தவதீபன், காந்திமோகன், ரமேஷ், ராஜ்குமார் உட்பட, 13 பேர், ஆலமரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்õ வட்டாட்சியர் தாஸ், காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ், ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் வர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். அதை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று மாலை, 5:00 மணிக்கு போராட்டத்தைக் கைவிட்டனர்.

0 கருத்துக்கள் :