உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

11.3.13

ஈழதமிழருக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்காக இலங்கை மீது சர்வதேச அளவில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் நேற்று 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலை யில், நேற்று நள்ளிரவு மாணவர்களில் 8 பேரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், மாணவர்களுக்கு ஆதரவாக இருந்த சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் உண் ணாவிரதம் நடத்திய கட்டிடத்தையும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.

0 கருத்துக்கள் :