ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு வேண்டுமா? மருத்துவம் சொல்லும் மல்லிகாராச்சி

28.3.13

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு மீண்டும் பெற்றுக்கொள்ளும் தேவை ஏற்பட்டிருக்குமாயின், அந்த தீவை மீண்டும் இந்தியாவுக்கு கொடுக்குமாறும், அத்துடன் ஒரு நிபந்தனையை மாத்திரம் இந்தியாவுக்கு முன்வைக்குமாறும் லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிகாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசாங்கம் இதற்கு விருப்பம் தெரிவித்தால், தாமதமின்றி, அந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், தேயிலை தோட்டங்களில் வேலைக்கு ஆட்கள் தேவையாக இருந்தால், தென் சீனாவின் யுவான் மாகாணத்தில் அல்லது வியட்நாம் அல்லது லாவேஸ் ஆகிய நாடுகளில் ஒன்றில் இருந்து பௌத்த மதத்தை சேர்ந்த யுவதிகளை இலங்கை அழைத்து வருமாறும் மல்லிகாராச்சி மேலும் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :