உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி 8 மாணவர்கள் விடுவிப்பு

11.3.13

உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்த 8 பேரையும் விடுவித்தது காவல்துறை. இலங்கை தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்டதற்காக இலங்கை மீது சர்வதேச அளவில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் நேற்று 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலை யில், நேற்று நள்ளிரவு மாணவர்களில் 8 பேரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்களை விடுவித்தது காவல்துறை.

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

நம் மாணவர்களுக்கு இருக்கும் அக்கரை கூட சில அரசியல் வாதிகளுக்கு இருக்க மாட்டங்குதே!!!

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)