ஸ்டாலினுக்கு ‘சேனல்- 4 காலம்’ மக்ரே வாழ்த்து

5.3.13


இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணங்களை லண்டனில் உள்ள சேனல் - 4 தொலைக்காட்சி அவ்வப்போது ஒளிபரப்பி வருகிறது. பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான ஆவணப் படத்தையும் அண்மையில் அது வெளியிட்டது. அதன் காரணமாக உலக முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சி அதிகரித்துள்ளது. இந்நிலையில் சேனல் - 4 தயாரிப்பாளர் காலம் மேக்ரே டெசோ போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, தொலைபேசியில் அழைத்து போராட்டத்துக்கு காலம் மேக்ரே வாழ்த்து தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :