சேனல் -4 ஆவணப்பட இயக்குநர் காலம் மக்ரே’வுக்கு

5.3.13


சேனல் -4 ஆவணப்பட இயக்குநர் காலம் மக்ரே உடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட திமுக தலைவர் கலைஞர் வாழ்த்து தெரிவித்துள்ளார் ! இன்று மதியம் லண்டன் நேரப்படி சுமார் 1.00 மணியளவில், கொலைக்களங்கள் ஆவணப் படத் தயாரிப்பாளர் காலம் மக்ரேயுடன் தொடர்புகொண்ட கலைஞர் வாழ்த்து தெரிவித்தார். தமிழர்களுக்காக நீங்கள் பல பணிகளை ஆற்றியுள்ளீர்கள் என்று கலைஞர் தெரிவித்தார். நான் எனது கடமையைத்தான் செய்தேன். மேலும் சில ஆதாரங்கள் அடங்கிய காணொளிகளை விரைவில் தாம் வெளியிடவுள்ளதாகவும், கலைஞரிடம் காலம் மக்ரே தெரிவித்துள்ளார். காலம் மக்ரே தயாரித்துள்ள இந்த ஆவணப்படமானது தமிழ் நாட்டில் பெரிய உணர்வலைகளை தோற்றுவித்துள்ளது என்றும், இந்திய நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டுவர அது உதவும் என்றும் கலைஞர் அவரிடம் தெரிவித்துள்ளார். ஜெனீவா சென்று லண்டன் திரும்பியுள்ள காலம் மக்ரே, உடல் நலக் குறைபாட்டில் இருந்தபோதிலும் , தன்னுடன் பேசியமை தமக்கு மகிழ்ச்சி தருவதாக கலைஞர் கூறியுள்ளார். கொலைக்களங்கள் ஆவணப் படத் தயாரிப்பாளர், காலம் மக்ரேயுடனான தொடர்பினை வழங்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஏற்படுத்த, புலம்பெயர் ஊடகவியலாளர் கண்ணன் ஏதுவாக அமைந்தார் என்றும், தொடர்ந்தும் தி.மு.க ஈழத் தமிழர் இன்னல்களைப் போக்க பாடுபடும் என்றும் ராதாகிஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மாணங்களை தி.மு.க உண்ணிப்பாக கவனித்துவருவதாகவும், இந்திய மத்திய அரசு அமெரிக்க தீர்மாணத்துக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தி.மு.க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :