வடக்கில் 15000 சிங்கள குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்

7.3.13

வடக்கில் பதினைந்தாயிரம் சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்றப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி வடக்கிலிருந்து யுத்தம இடம்பெற்ற போது வெளியேறியவர்களே இவ்வாறு மீள் குடியேற்றப்பட உள்ளனர். இந்த குடியேற்றத்தினை வைத்துக் கொண்டு வடக்கினை சிங்கள மயமாக்கும் முயற்சியில் அரசு இறங்கியிருக்கின்றது என்று யாரும் கருதிவிடக் கூடாது எனவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இவர்கள் வெலிஓயா, பதவியா மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளிலேயே மீள்குடியேற்றப்பட்டவுள்ளனர். இதேவேளை, வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள சிங்கள குடும்பங்களுக்காக 850 வீடுகளை அரசாங்கம் கட்டிக் கொடுக்கவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்துள்ளார். எனினும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முடிவடையும் காலத்தை உறுதிபடக் குறிப்பிட முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :