ஆவணப் படத்தில் இடம்பெறும் காட்சிகள் உண்மையானதல்ல : இலங்கை மறுப்பு

19.2.13

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதி கட்ட போரின் போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை சிங்கள ராணுவம் சுட்டு கொன்றது. இந்த காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை இங்கிலாந்தில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல்-4 தொலைக்காட்சி இன்று இரவு 10.55 மணி அளவில் (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.25 மணியளவில்) வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
ஆனால், இந்த ஆவணப் படத்தில் இடம்பெறும் காட்சிகள் உண்மையானதல்ல என்று இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் ருவான் வனிகசூர்யா கூறியதாவது:-
பொய்கள், பாதி உண்மைகள், வதந்திகள் மற்றும் யூகத்தின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை படைக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது இது முதல் முறையல்ல. குறிப்பாக ஐ.நா. மனித உரிமை குழு கூட்டம் நடக்கும்போது இதுபோன்று குற்றச்சாட்டை கூறுவார்கள். ஆனால், கூட்ட முடிவில் அது இல்லாமல் போய்விடும். விசாரணை நடத்தக்கூடிய அளவுக்கு உண்மையான ஆதாரங்களை எங்களிடம் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :