இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்கும்; மன்மோகன் சிங் திட்டவட்டம்

22.2.13

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து உரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் ´இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என சுதர்சன நாச்சியப்பன் தலமையிலான குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதற்கு சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக உரிமையை பெற்றுத் தருவது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது, அத்துடன் பறிக்கப்பட்ட அவர்களின் சொத்துகளை உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்குவது தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா வற்புறுத்தும் என இந்திய பிரதமர் தங்களிடம் உறுதியளித்துள்ளதாக சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :