உலகின் மிகப் பெரிய முதலை மரணம்

11.2.13

பிலிப்பைன்ஸ் நாட்டின் வாடா பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு உப்பு தண்ணீரில் வாழும் முதலை ஒன்றை பிடித்தனர். அந்த முதலை 6.17 மீட்டர் (20.24 அடி) நீளமும், ஒரு டன் எடையும் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த முதலையை பாதுகாப்பாக வளர்த்து வந்த நிலையில் அந்த முதலை உடல் நல குறைவு காரணமாக இறந்துபோனது. வயிற்று கோளாறு காரணமாக இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இருந்த போதும் முழு பரிசோதனைக்கு பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும். இறந்த அந்த முதலை சுமார் 50 வயது இருக்கும் என கணித்துள்ளனர். முதலை இறந்த செய்தி கேட்டு அக்கிராம மக்கள் சோகம் அடைந்துள்ளனர். எங்கள் சிறு கிராமம் உலக அளவில் தெரிய உதவிய அந்த முதலையின் ஞாபாகர்த்தமாக அதை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துக்கள் :