யாழில் தேசியக் கொடியை காலால் மிதித்த நான்கு இளைஞர்கள் கைது

9.2.13

யாழ். திருநெல்வேலி பகுதியில் இலங்கையின் தேசியக் கொடியினை காலால் மிதித்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை திருநெல்வேலி பரமேஸ்வரா சந்தியில் வைத்து, தேசிய கொடியினை காலால் மிதித்தவேளை குறித்த இளைஞர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களையும் கோப்பாய் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :