திருப்பதி தேவஸ்தானம் முற்றுகை! ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு!

8.2.13

ராஜபக்சே திருப்பதி கோவிலுக்கு வருவதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தை அதியமான் தலைமையில் தமிழர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சுமார் 40 தோழர்கள் முற்றுகை செய்தனர். சென்னை பனகல் பூங்காவின் அருகே இருந்து பேரணியாக புறப்பட்டு போராட்டக்காரர்கள் தேவஸ்தானத்தை நோக்கி நகர்ந்தனர். தேவஸ்தானத்தை நெருங்கும் முன்பே போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய காவல் துறை அவர்களை கைது செய்வதாக கூறியது. அதனால் போராட்டக்காரர்கள் கோபம் கொண்டு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காவல்துறை அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு போய் காவல்துறை பேருந்தில் ஏற்றினர். அதேநேரத்தில் காவல் துறை கவனம் வேறு திசையில் இருந்த போது, ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு போராட்டக் குழுவினர் சிலர் தீயிட்டனர். தீ கொழுந்து விட்டு எரிந்தது. காவல் துறை இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிறுது நேரத்தில் தண்ணீர் கொண்டு வந்து எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை அணைத்தனர் காவல் துறை. பின்பு போராட்டக் காரர்கள் அனைவரையும் தி.நகர் , வினோபா மண்டபத்தில் அடைத்து வைத்தது காவல் துறை.

0 கருத்துக்கள் :