காதலனுடன் கம்பி நீட்டிய மகள், அவமானம் தாங்காமல் தந்தை தற்கொலை

5.2.13

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பக்கமிருக்கும் ஆவுடையானூர் புதூர் கிராமத்தின் கூலித் தொழிலாளி ராமருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் இதே ஊரைச் சேர்ந்த ராமசாமியின் மகள் பத்மா (27) வாய் பேசமுடியாதவர் ராமருக்கும், பத்மாவுக்கும் கடந்த 6 மாத்ததிற்கும் மேலாக ஏற்பட்ட பழக்கம் காதலாக பரிணமித்தது.மகளின் காதல் சங்கதியை தெரிந்த அவரது பெற்றோர் பத்மாவைக் கண்டித்தார்கள் பெற்றோரின் எதிர்ப்பு, கண்டிப்புகளை மீறி பத்மா தொடர்ந்து ராமரைச்சந்தித்து வந்தார் இதனிடையே திடீரென நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியேறினார் அதனால் மனவேதனை, உளைச்சல் காரணமாக வேதனைப்பட்ட ராமசாமி மகள் ஒடிப்போன அவமானம் தாங்கமாட்டால் மதுவில் விஷம் கலந்து குடித்தார் விரைந்து சிகிச்சைகாக தென்காசி அரசு மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்ட ராமசாமி சிகிச்சை பலனின்றி இறந்தார் இது தொடர்பாக பாவூசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகினறனர். செய்தி : பரமசிவன்

0 கருத்துக்கள் :