தமிழர்களுக்கு எதிராக முத்தையா முரளிதரனும் லசித் மலிங்கவும்

25.2.13

சிங்கள பேரினவாத அரசின் இன அழிப்புப் போரிலிருந்து தமது உயிர்களைப் பாதுகாத்து கொள்வதற்காக, ஆபத்து மிக்க கடற்பயணத்தை மேற்கொண்டு ஈழத்தமிழர்கள் அவுஸ்ரேலியாவுக்கு செல்வது அதிகரித்துள்ளது. இதனை தடுப்பதற்கு அவுஸ்ரேலிய கடற்படை பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக சிறீலங்கா கடற்படையை பலப்படுத்தி வருவதோடு, ஏனைய சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த வகையில், ஈழத் தமிழர்களுக்கு பிரச்சினையில்லையென்றும், ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலியாவுக்கு கூப்பிடவேண்டாமென்றுமென்று அவுஸ்ரேலியாவிலுள்ள தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதற்காகவும், அவுஸ்ரேலியா அகதிகள் தொடர்பான மனித உரிமையை சரியாக பின்பற்றவில்லை என்று அவுஸ்ரேலியாவைச் சார்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களின் விமர்சனங்களுக்கு முகம் கொடுக்கவும் சிறீலங்காவின் பிரபல கிரிக்கட் வீரர்களான முத்தையா முரளிதரனையும் லசித் மலிங்காவையும் பயன்படுத்தவுள்ளது. தமிழர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு முத்தையா முரளிதரனும் லசித் மலிங்கவும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :