தமிழீழ விடுதலைப் புலிகளை சட்ட ரீதியான இயக்கமாக மாற்ற நவநீதம்பிள்ளை முயற்சி!- அரசாங்கம்

17.2.13

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட ரீதியான இயக்கமாக மாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையானது புலிகளுக்கு சார்பாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இடமளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் புலிகளை சட்ட ரீதியாக நவநீதம்பிள்ளை முயற்சித்துள்ளார். இந்த அறிக்கையானது நாட்டின் தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் தலையீடு செய்தலாகும்.

இந்த அறிக்கையின் 63-3 பிரிவில் படையினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தி படையினரை சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.

போர் தொடர்பில் விசாரணை செய்யும் நோக்கில் வரும் எந்தவொரு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதியையும் நாட்டுக்கள் அனுமதிக்கப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :