விடுதலைப் புலிகள் இயக்கத்தை ட்விட்டரில் கிண்டலடித்த சுப்ரமணியம் சுவாமி

26.2.13

விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி இடக்கான கருத்துக்கள் தெரிவிப்பதில் முன்நிற்பவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி. கடந்த ஆண்டு (2012) ஆகஸ்ட் 10-ம் தேதி கொழும்புவில் நடைபெற்ற ராணுவ மாநாடு ஒன்றின் 2-வது நாள் நிகழ்ச்சிகளில் பேசுவதற்காக, இந்தியாவில் இருந்து சுப்ரமணியம் சுவாமி அழைக்கப்பட்டிருந்தார். அதிகளவில் ராணுவத்தினர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் சுப்ரமணியம் சுவாமியின் பேச்சுக்கு, அமோக வரவேற்பு காணப்பட்டது. அப்படி என்னதான் பேசினார்? “விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தால், தமிழகத்தில் கூட்டம் சேர்வதில்லை. இதிலிருந்து, விடுதலைப் புலிகளை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் நிராகரித்து விட்டனர் என்றுதான் பார்க்க வேண்டும். இதை இந்தியன் என்ற முறையிலும், தமிழன் என்ற முறையிலும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். அது பழைய கதை. (ஞாயிற்றுக்கிழமை) ட்விட்டரில், விடுதலைப்புலிகள் பற்றி கருத்து ஒன்றை தட்டி விட்டிருக்கிறார் சுவாமி. அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும். அப்படி என்ன சொல்லியிருக்கிறார்? விடுதலைப் புலிகளின் ஆங்கில சுருக்கமான LTTE (Liberation Tigers of Tamil Eelam) என்பதற்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார். அவரது விளக்கத்துக்கு, “தொலைந்த தமிழர்கள் எலிகளாக மாறியது” என அர்த்தம் வருகிறது. இதோ அவரது ட்விட்: Subramanian Swamy ‏@Swamy39: What does the acronym LTTE nowadays stand for? Lost Tamils Turned Eleegal! (Eleegal in Tamil means Rats.)

1 கருத்துக்கள் :

udaya kumar.t சொன்னது…

samy avargala aeliyaga mariya tamilargaluku bayanthuthan tamil elathil 200000ranuvathai vaithulan singalavan