திருச்சி ஓட்டலில் கருணா தங்கியிருக்கிறாரா?இலங்கை தமிழர்கள் கொந்தளிப்பு

21.2.13

சிங்கள எம்பி கருணா ரத்னா ஜெயசூர்யா, சீர்காழி அருகே உள்ள திருக்கடையூரில் ஆலய தரிசனம் செய்ய வந்தார். அங்கேயே அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. இதையடுத்து அவர், மனைவி மற்றும் உறவினருடன் திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலில் தங்கியிருக்கிறார். இந்த ஓட்டலுக்கு அருகில் இலங்கைத்தமிழர்கள் முகாம் உள்ளது. அவர்களுக்கு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி, சிங்கள அரசிடம் சென்று, ஈழத்தமிழர்களின் துரோகி என்றழைக்கப்படும் கருணா வந்துவிட்டார் என்று தகவல் சென்றிருக்கிறது. இதையடுத்து முகாமில் இருந்த இலங்கைத்தமிழர்கள் ஆவேசத்துடன் எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்குள் நுழைந்தனர். பின்னர் ஓட்டல் நிர்வாகத்தினரும், போலீசாரும் வந்து, இது அந்தக்கருணா இல்லை. எம்.பி. கருணா ரத்னா ஜெயசூர்யா வந்துள்ளார் என்று கூறவே, பின்னர் சமாதானம் அடைந்தனர். இருப்பினும், இலங்கையிலும் இங்கேயும் இப்படி நாங்கள் அவதிப்படுகிறோம். இதற்கெல்லாம் காரணம் சிங்கள அரசுதானே என்று சிங்கள எம்.பி. தங்கியிருந்த ஓட்டலை பார்த்து தாக்க முற்பட்டனர்.(nakkheeran)

0 கருத்துக்கள் :