இந்திய அரசு இனியாவது உணர வேண்டும் ராமதாஸ்

6.2.13

திருகோணமலையில் நடந்த அந்நாட்டின் 65ஆவது விடுதலை நாள் விழாவில் பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷஇ இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்ற திமிராக கூறியிருக்கிறார். இது இந்தியாவை அவமதிக்கும் செயலாகும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:- இலங்கைப் பிரச்சினையில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இலங்கைத் தீவில் அனைத்து அதிகாரங்களுடன் வாழ்ந்து வந்த அந்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயர்கள் மற்றும் விடுதலைக்கு பின்னர பேரினவாதிகளின் சதியால்இ இரண்டாம் தர குடிமக்களாக்கப்பட்டனர். இதற்கு ஒரே தீர்வு தமிழீழம்தான் என்பதால்இ அதை அடைவதற்காக போராடி வந்தனர். இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண 1987-ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந் தத்தின்படிஇ 13-வது அரசியல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. ஆனால்இ இது போதுமானதல்ல என்று கூறி இதை ஏற்க ஈழத் தமிழர்கள் மறுத்து விட்டனர். அதைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்திய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசுஇ தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஒப்புக்கொண்டது. அதன் பின்னர்இ இலங்கை அரசுக்கும்இ விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்டதால் அமைதி முயற்சி தோல்வியடைந்தது. போர் முடிவடைந்த பின்னர்இ இலங்கைக்கு வந்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியபோதுஇ ஈழத் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி இனச்சிக்கலுக்கு தீர்வு காண்பதாக ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷஇ அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்த போதும்இ 13ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின் படியான அதிகாரங்கள் மட்டுமின்றிஇ கூடுதல் அதிகாரங்களை வழங்கி தமிழர்கள் தன்னாட்சியுடன் வாழ வகைசெய்யப்படும் என ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதி அளித்திருந்தார். இதே வாக்குறுதியை அவர் பலமுறை இந்தியாவுக்கு வழங்கியிருந்தார். ஆனால்இ தற்போது ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என்றும்இ தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே வாழ வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. ராஜபக்சேவின் இந்த அறிவிப்பு ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடனும்இ சுயமரியாதையுடனும் வாழ வகை செய்வோம் என்று கூறிவரும் இந்திய அரசை அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்தியாவிடமிருந்து போரின் போதும்இ போருக்குப் பிறகும் பல்வேறு உதவிகளை பெற்றுக் கொண்ட இலங்கை அரசுஇ இப்போது சீனாவுடன் சேர்ந்து கொண்டு நம்மை எட்டி உதைக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்திய அரசு இனியாவது உணர வேண்டும்.

0 கருத்துக்கள் :