பிரபாகரன் மகன் மரணம் பற்றி எதுவும் தெரியாது பொன்சேகா

21.2.13

பிரபாகரன் இளையமகன் பாலச்சந்திரனை சிங்கள ராணுவம் பிடித்து வைத்து சுட்டுக்கொன்றிருப்பதை இங்கிலாந்து டி.வி. ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. இதுபற்றி இறுதி போர் காலத்தில் இலங்கை தளபதியாக இருந்த சரத்பொன்சேகா,

’’2009-ம் ஆண்டு மே 17, 18 தேதி, 19-ந்தேதி காலை 10 மணி வரை இறுதி போர் நடந்தது. அப்போது  400 விடுதலைப்புலிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அதில் பிரபாகரன் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் உடலும் இருந்தது. சார்லஸ் அந்தோணி உடலை முன்னாள் தளபதி கர்ணா அடையாளம் காட்டினார்.

 இளைய மகன் பாலச்சந்திரன் உடலை நாங்கள் கைப்பற்ற வில்லை. அவருடைய மரணம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அதுபோல பிரபாகரனின் மனைவி மதிவதினி, மகள் துவாரகா பற்றியும் எங்களுக்கு தெரியாது. அவர்கள் யாருடைய உடலும் கைப்பற்றப்படவில்லை’’ என்று கூறியுள்ளார்.

இறுதி போர் நடந்த போது முள்ளிவாய்க்கால் பகுதி பொறுப் பாளராக இருந்த தளபதி பிரிக்செல்வா பொறுப்பில் தான் பிரபாகரன் குடும்பத்தினர் இருந்ததாக தகவல்கள் வெளி யாகின.

இது குறித்து பிரிக்செல்வா, ’’நாங்கள் விடுதலைப்புலி தளபதி தீபன் உடலை மட்டும் தான் கைப்பற்றினோம். மற்றவர்கள் பற்றி எதுவும் தெரியாது’’ என்று கூறினார்.

0 கருத்துக்கள் :