புலிகளை காரணம் காட்டி ராணுவத்தின் செயலை நியாயப்படுத்த முடியாது: வெங்கய்ய நாயுடு

27.2.13

மாநிலங்களவையில் இலங்கைத்தமிழர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது வெங்கய்ய நாயுடு பேசினார். அவர், ’’12 வயது சிறுவனை இலங்கை ராணுவம் பிடித்து வைத்து கொன்றது மனிதாபிமானம். மற்றது. புலிகளின் நடவடிக்கையை காரணம் காட்டி இலங்கை ராணுவத்தின் செயலை நியாயப்படுத்த முடியாது. இலங்கையில் நடப்பதை மவுனமாக பார்த்துக்கொண்டு இருபது சரியா?இலங்கை மீது செல்வாக்கை செலுத்த இந்தியாவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. இலங்கைக்கு அமைதி காப்பு படையை அனுப்பியது இந்தியா. போரின்போது ராணுவத்தின் உதவியும் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ராணுவ உதவியை பெறூம் நாட்டை தட்டிக்கேட்க முடியாது என்பதை ஏற்க முடியாது. இலங்கை மீது செல்வாக்கை செலுத்த இந்தியாவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது’’என்று பேசினார்

0 கருத்துக்கள் :