கணவன்-மனைவி இருவரும் தற்கொலை எங்களை மன்னித்து விடுங்கள்’

4.2.13

திருமலையில் உயிரை மாய்த்தால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்ற கருத்தில் பக்தர்கள் இந்த துயர முடிவை மேற்கொள்கிறார்கள். ஆனால் புனித தலமான திருமலையில் தற்கொலை செய்வது பாவச்செயல் என தேவஸ்தானம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதி மலையில் இருந்து குதித்து நேற்று கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமலை செல்லும் பாதையில் அவ்வாச்சாரி கோனே என்ற இடம் உள்ளது. 100 அடி பள்ளத் தாக்கு கொண்ட இடத்தில் சிறிய தடுப்பு சுவர் உள்ளது. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இந்த தடுப்பு சுவரில் ஏறி நின்று மலையின் அழகை ரசிப்பார்கள். அப்போது தவறி விழுந்து சிலர் உயிரிழப்பது உண்டு. ஆபத்தான இந்த தடுப்பு சுவரில் நேற்று மதியம் ஒரு கைப்பை அனாதையாக இருந்தது. நீண்ட நேரமாக அந்த பை கேட்பாரற்று கிடந்ததால் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கும், போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் அந்த பையை திறந்து பார்த்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. பையில் ஒரு டைரி இருந்தது. அதில் இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ’’எனது பெயர் ஸ்ரீனிவாசலு. கடப்பா மாவட்டம் ஐ.டி.ஐ. பகுதியில் வசிக்கிறேன். நண்பர்கள் செய்த மோசடியால் பணத்தை எல்லாம் இழந்து விட்டேன். ரூ.5 ஆயிரம் கடனுக்கு ரூ.50 ஆயிரம் தர வேண்டும் என்று எழுதி வாங்கி ஏமாற்றி விட்டனர். கடனில் சிக்கி தவிப்பதால் எனது நெருங்கிய உறவினர்கள் என்னை விட்டு விலகி விட்டனர். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் அவமானப்பட்டேன். ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு இங்கே உயிரை விடுகிறேன். எங்களை மன்னித்து விடுங்கள்’’என்று கூறப்பட்டு இருந்தது. கடிதத்துடன், ஒரு பெண்ணுடன் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது. புகைப்படத்தில் இருப்பவர் ஸ்ரீனிவாசலுவும், அவரது மனைவியுமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. கடிதத்தின் இறுதியில் ‘‘எங்களை மன்னித்து விடுங்கள்’’ என்று குறிப்பிட்டு இருந்ததால் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ’

0 கருத்துக்கள் :