இலங்கையில் விஸ்வரூபம் இன்னும் சில தினங்களில்

7.2.13

இன்னும் சில தினங்களில் இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென ஊடகத் துறை அமைச்சரும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இத்திரைப்படம் சுமுகமாக திரையிடப்பட்டதன் பின்னர் நாம் அதனை இன்னும் சில தினங்களில் இங்கு திரையிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். குறிப்பாக முஸ்லிம் அமைச்சர்களுடன் இது தொடர்பில் கூடி ஆராய்ந்து நல்ல முடிவொன்று எட்டப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

1 கருத்துக்கள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)