புத்தர் சிலைகளுக்கு ஈரானில் தடை!

18.2.13


ஈரானில் புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெஹ்ரானின் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த புத்தர் சிலைகளை ஈரானிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேறு மதக் கொள்கைகள் ஈரானில் பிரச்சாரப்படுவது தொடர்பில் ஈரான் அதிக அக்கறை கொண்டுள்ளது. அதே நோக்கிலேயே புத்தர் சிலைகள் தற்போது அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டில் ஏற்கனவே 'பார்பி' பொம்மைகள் போன்ற சில விடயங்களை ஈரான் முற்றிலும் தடைசெய்துள்ளது. அங்கு மேலைத்தேய கலாசாரத்தை ஊக்குவிக்கும் விடயங்களை ஈரான் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றது.

0 கருத்துக்கள் :