கசிந்தது தீர்மானம்: சிறீலங்காவுக்கு விலங்கா? விடுதலையா?

12.2.13

ஈழத்தமிழர்களுடைய போராட்டத்தில் மனித உரிமைகள் விவகாரம் பெற்றுள்ள முக்கியத்துவத் தொடர்ந்து, எதிர்வரும் 22வது ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தொடரை மையப்படுத்தி தனது விசேட நிருபரை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளது.ஏதிர்வரும் 22வது அமர்வில் சிறீலங்கா மீது அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ள விசேட நிருபர், அந்த தீர்மானம் ஈழத்தமிழர்களின் நீதி கோரி நடாத்தும் போராட்டத்தில் பெரும் பாய்ச்சலாகவோ அல்லது திருப்புமுனையாகவோ இருக்கப் போவதில்லையெனவும் தெரிவித்தார். கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒப்பிடுமிடத்து ஓரளவு பறவாயில்லை எனத் தெரிவித்த எமது நிருபர், மீள்நல்லிணக்கமும் பொறுப்புக் கூறும் தன்மையும், வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், பிரதம நீதியரசர் சட்டத்துக்கு முரணான வகையில் பதவிநீக்கம் செய்யப்பட்டமை போன்ற விடயங்கள் குறித்த தீர்மானத்தில் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவித்ததோடு, இலங்கைத் தீவில் இன்னும் மனித உரிமைகள் நிலைமை முன்னேற்றமடையவில்லை என்பதையும்; குறித்த தீர்மானம் கோடிட்டுகாட்டக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவித்தார். இதேவேளை, இந்த தீர்மானத்தின் ஊடாக சிறீலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படவுள்ளதாகவும், இது ஒரு இறுக்கமாக தீர்மானமாக அமையும் எனவும் சில தமிழ் ஊடாகங்களில் வெளியான செய்தியை ஜெனிவா கள யதார்த்தத்திலிருந்து முற்றுமுழுதாக வேறுபட்டது எனவும் குறிப்பிட்டார்.

0 கருத்துக்கள் :