நடிகர் கமல் மீது வந்த இரு பலமான விமர்சனம்

2.2.13

(விமர்சனம் *)விஸ்வரூபம் படத்தில் பிராமணர்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அதனால் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் சென்னை போலீஸ் கமிஷனரிடமும், உள்துறை செயலாளரிடமும் புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில் பிராமணர் சங்க மாநில தலைவர் நாராயணன்,  நக்கீரன் நிருபரிடம் இது குறித்த விளக்கம் அளித்தார். அவர், ‘’விஸ்வரூபம் படத்தில் பிராமணர்களை இழிவுபடுத் தியிருப்பதால் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று வேறு பிராமண சங்கத்தினர் ( ராமகிருஷ்ணன் ) புகார் தெரிவித்திருகின்றனர். அப்படி படத்தை தடை செய்யக்கூடாது. ஒருவனை அழவிட்டு கண்ணீரை வேடிக்கை பார்ப்பவன் பிராமணன் அல்ல. அதனால் படத்தை எதிர்க்கக்கூடாது. அவர் மிகுந்த பொருட் செலவில் படத்தை எடுத்திருப்பதால் தடை செய்யக்கூடாது. ஆனால், கமலஹாசனை நாங்கள் ஒரு மனிதனாகவே மதிப்பது கிடையாது. தாய்நாட்டையும், தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் குழிதோண்டி புதைக்கும் பணியை கமல் காலம் காலமாக செய்து வருகிறார். தன் வீட்டு பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் உலகத்தில் இருக்கும் அத்தனை பெண்களும் இருப்பதாக கமல் கருதுகிறார். அவர் வீட்டு பெண்கள் எப்படி இருந்தாலும் இருந்து விட்டு போகட்டும், அதே நிலைப்பாட்டுடன் தேசத்தில் உள்ள அனைவரையும் எண்ணுதல் கூடாது. கமல் எங்களை இனத்தை கேவலப்படுத்தி காட்சி வைத்திருந்தால் அவர் அழிந்துபோகவேண்டும் என்று நினைக்க மாட்டோம். அவராகவே தன் தவறை உணரவேண்டும்’’ என்று கூறினார்.

(விமர்சனம் **)கமலகாசனிடம் சில கேள்வி, உலக நிகழ்வை நீங்கள் படமாக்கியதாகச் சொல்கிறீர்களே, முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்களே ஏன் அதனைப் படமாக்க உங்களுக்குத் தோணவில்லை.நீங்கள் உலக நிகழ்வுகளைத் தான் படமாக எடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை படமாக எடுக்கவில்லை ?



** இந்த இரு கருத்துக்களுக்கும் அப்பால் ஒரு நடிகன் என்ற முறையில்.... நான் ஒரு முஸ்லிம் ஆனால் விஸ்வரூபத்தை எதிர்க்கவில்லை ஏன்? நான் ஒரு முஸ்லிம். அதற்காக பெருமைப்படுகிறேன். என்னுடைய இஸ்லாம் ஒரு மதமல்ல, ஒரு மார்க்கம். அதாவது எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எனக்குக் கற்றுத் தரும் ஒரு ஆசான். அவ்வளவு தான். அது எனக்கு அமைதியைக் கற்றுத் தருகிறது. பொறுமையைக் கற்றுத் தருகிறது. அழகிய வாழ்வியலைக் கற்றுத் தருகிறது. உண்ணுவது முதல் உறங்குவது வரை, திருமணம், உறவு பேணல், கடன், பிள்ளை வளர்ப்பு என அனைத்திலும் எனக்கு அழகாக வழிகாட்டுகிறது. எனக்கு ஒரு போதும் அது தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் கற்றுத் தந்ததில்லை. அதனால் தான் நான் பேஸ்புக்கில் மதம் பிடித்து ஆடுவதில்லை, ஆடுபவர்களை நட்பு வட்டத்தில் அனுமதிப்பதுமில்லை. உங்களுக்குப் பிடிக்காவிட்டால் படத்தைப் பார்க்காதீர்கள். புறக்கணித்துவிடுங்கள். அதைவிட்டு விட்டு எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்து அடுத்தவர் எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறீர்கள்? தண்ணீருக்குள் பந்தை வைத்து அழுத்தினால் தான் அது வேகமாக வெளியே வரும். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தை நீக்க நீங்கள் பாடுபடும் அதே நேரத்தில், இஸ்லாமியர்கள் போராட்டக்காரர்கள் என்ற சாயல் படிந்துகொண்டிருக்கிறது. என் மக்களை மதம்பிடித்த போராட்டக்காரர்களாக இந்த சமுதாயம் பார்ப்பதை சத்தியமாக நான் விரும்ப மாட்டேன். பல்லாயிரம் வருடங்களாகப் போற்றிப்பாதுகாக்கப்படும் இஸ்லாத்தின் கண்ணியம் ஒரு படத்தினால் பாழ்படும் என்றால்.... எம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பல கோடி இந்து, கிறுத்துவ நண்பர்கள் ஒரு படத்தினால் தம் இஸ்லாமிய சகோதரர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கத் துவங்குவார்கள் என்றால்... அது முழு முட்டாள்தனம்! குறுகிய மனப்பான்மை!! உன் மார்க்கம் புனிதமான மார்க்கம் என்று நம்பினால், ஒரு சாதாரண திரைப்படம் அதை கெடுத்துவிட முடியுமா? அது என்ன அவ்வளவு சக்தி வாய்ந்ததா? என்னைப் பொறுத்தவரை, இந்த ஆர்ப்பாட்டங்களே போதும் விஸ்வரூபத்துக்கு விளம்பர செலவை மிச்சப்படுத்த என்பேன். அரசியல் ஆதாயத்துக்காக அதிமுக அரசு முஸ்லிம்களை பலிகடா ஆக்கிவிட்டது என்று தான் தோன்றுகிறது. மதவெறி கொண்டவர்கள் எல்லா மதத்திலும் உண்டு... ஆனால் அவ்வாறு வெறி கொள்ள அவர்கள் மதம் சொல்கிறதா என்றால், இல்லை என்பேன். அப்படி சொல்லும் மதம் சரியான மதமாகவும் இருக்க முடியாது. மற்றபடி இந்துக்கள் என்றென்றும் இஸ்லாமியர்களின் உற்ற தோழர்கள் தான். அவர்கள் இப்படத்தைப் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, எம்மை ஒரு போதும் தவறாகவோ, தீவிரவாதிகளாகவோ பார்க்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்! மேலும் விஸ்வரூபம் பற்றிய என் கருத்துக்கள் இங்கே...
  • sumazla.blogspot.com
  • 0 கருத்துக்கள் :