நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டமைக்கு இரண்டு நேரடி சாட்சிகள்

25.2.13

இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மேலும் இரண்டு கண்கண்ட சாட்சிகள் முன்வந்துள்ளதாக தெ இன்டிபென்டன்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் வெள்ளைக் கொடியை ஏந்தி சரணடைய சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதான செயலக தலைவர் புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சாட்சிகளாக செயற்பட முன்வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். எனினும் இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்காக இவர்கள் தமது பெயர்களை வெளியிட மறுத்துள்ளனர். முதலாமவர், விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு மெய்காவலராக செயற்பட்டு வந்தார். இறுதிப்போரின் போது காயமடைந்த அவர், படையினரிடம் சரணடைந்த நிலையில் படையினரால் தமக்கு விடுதலைப்புலிகள் தொடர்பில் தகவல் தருபவராக பயன்படுத்தப்பட்டார். இந்தநிலையில், தாம் எதிர்ப்பார்க்காத வகையில் நன்கு ஒழுங்கமைப்பட்ட வகையில், விடுதலைப்புலிகள், படையினரிடம் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இந்தநிலையில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பின்னர் சடலங்களாக கிடந்தமையை தாம் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஆசிரியராக செயற்பட்ட ஒருவர், தாம் விடுதலைப் புலிகளின் நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைவதை கண்டதாகவும் பெருமளவான இராணுவத்தினர் முன்னிலையில் இந்த சரணடைதல் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்தவர்கள், கொல்லப்பட்ட நிலையில், சுமார் 40 விடுதலைப்புலிகளின் குழு ஒன்று படையினரிடம் சரணடைய பேச்சுக்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள குறித்த ஆசிரியர், அவர்கள் தொடர்பில் இன்று வரை தகவல்கள் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிருடன் தீயிட்டு சித்திரவதை: கொல்லப்பட்ட நடேசனின் உடலம்: புது ஆதாரம் !

1 கருத்துக்கள் :

Sakthi Dasan சொன்னது…

தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.