ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு வலுக்கிறது எதிர்ப்பு

6.2.13

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக உணர்வாளர்களின் எதிர்ப்புப் போராட்டம் வலுத்துள்ளது. நேற்றும் இன்றும் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது 50க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்தாகத் தெரிவிக்கப்டுகின்றது. நாம் தமிழர் கட்சியினர் கைது இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று அறிவித்ததற்கும் கண்டனம் தெரிவித்தும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலை மறித்து கோஷமிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 27 பேர் இதன்போது கைது செய்யப்பட்டனர். சட்டகல்லூரி மாணவர்கள் கைது மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து கோவை அரச சட்டக் கல்லூரி மாணவர்கள், ரயில் மறியலில் நேற்று மாலையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்திரசேகர் மற்றும் ரயில்வே பொறுப்பதிகாரி லாரன்ஸ் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் 13 பேரை பொலிஸார் கைது செய்தனர். இந்தியாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை ஜனாதிபதியை கண்டித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் திருவனந்தபுரத்திலிருந்து கோவை வந்து மாலை 3.35க்கு புறப்பட வேண்டிய கோரக்பூர் செல்லும் ரப்பிசாகர் எக்ஸ்பிரஸ் நேற்று 10 நிமிடம் கழித்து 3.35 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மஹிந்தவின் இந்திய வருகையைக் கண்டித்து, சேலம் நீதிமன்ற வளாகத்தில் கூடிய சேலம் பார் அசோஷி யேஷன் உறுப்பினர்கள், வழக்குரைஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழர்களுக்கு தன்னாட்சி தர இயலாது என்று கூறியதற்கு கடும் கண்டனமும் தெரி வித்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும்
ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்ச, புத்த பூமியில் கால் வைக்கக் கூடாது!- பீகார் சட்டமன்ற உறுப்பினர்

மனித படுகொலையில் ஹிட்லரை மிஞ்சிய ராஜபக்ஸ, அகிம்சை போதித்த மண்ணில் கால் வைக்கக் கூடாது என இந்தியாவின் பீகார் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

பீகார் ஒபரா தொகுதியை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம பிரகாஷ் சிங்( வயது 38) முன்னால் காவல் துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்பு தான் இவரது குறிக்கோள்.

தமிழர்களின் பிரச்சினையை அறிந்த இவர், ராஜபக்ச வருகையை கண்டித்து தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

'சம தர்மத்தை போதித்த நமது பாரத தேசத்தின், அண்டை நாடான இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழம் அமைவதற்கும் போராடி கொண்டு இருந்த தமிழர்களின் மீது இறுதி கட்ட போரில் நடந்த பேரிழப்புகள், துன்பங்கள் கணக்கில் அடங்காதவை.
தமிழர்களின் உரிமைகளை கொடுப்பதற்கு பதிலாக அவர்களிடம் இவர்கள் பறித்தது 150,000 தமிழர்களின் உயிர்கள். தமிழர்கள் இருந்தால் தானே அவர்கள் உரிமைகள் கேட்பதற்கு என்ற குறிகோளோடு செயல் பட்டு கொண்டு இருக்கும் ராஜபக்சே, தனது சொந்த மக்கள் மீது போர் தொடுத்து, நரபலியில் ஹிட்லரை பின்னுக்கு தள்ளி உள்ளார்.
இப்படி பட்ட ஒரு மனித மிருகம் வருவது நமது நாட்டிற்கே கேடு. உலகிற்கே அகிம்சையை போதித்த புத்தர் பிறந்த மண் புத்தகயா,சாம்ராட் அசோகர் தனது ஆயுதத்தை தூக்கி எறிந்து உலகம் முழுவதும் அகிம்சை போதிபதற்கு இந்த இடத்திலிருந்து தான் தொடங்கினார்.

இந்த மண்ணில் தான், நமது சகோதரர்களான தமிழர்களையும் கூடவே மனிதாபிமானத்தையும் கொன்று குவித்த பாவி மகிந்த ராஜபக்ச வருவதற்கு நாம் என்றுமே அனுமதிக்க கூடாது.மேலும் 7ம் திகதி அன்று மகிந்த ராஜபக்சவின் வருகையை கண்டித்து புத்தகயாவில் போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :