ராஜபக்சே ஆட்சியில் பத்திரிகையாளர்களின் கதி? : கலைஞர்

2.2.13

தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கை. இலங்கையில் பத்திரிகையாளர்கள் இணைந்து 'கறுப்பு ஜனவரி' எனக் கடந்த 29-1-2013 அன்று கடைப்பிடித் திருக்கிறார்களே? இலங்கையில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுகின்றனர்; காணாமல் போய் விடுகின்றனர்; எனவே இந்தக் கொடூரமான நிகழ்வுகளை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற் காக இலங்கை பத்திரிகையாளர்கள் 29-1-2013 அன்று கறுப்பு ஜனவரியைக் கடைப்பிடித் திருக்கிறார்கள். பிரகீத் எக்னாலி கோடா என்ற அரசியல் விமர்சகர் 2010 ஜனவரி 24 அன்று காணாமல் போய் விட்டார். சண்டே லீடர் என்ற பத்திரிகையின் ஆசிரியர், லெசந்தா விக்கிரமதுங்கா என்பவர் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார். சிரசா என்னும் பத்திரிகை நிறுவனம் 2009 ஜனவரியில் தாக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் ஒருவர் தாக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் உதயன் எனும் தமிழ்ப் பத்திரிகையின் உதவியாளர் ஞானசுந்தரம் என்பவர் தாக்கப்பட்டார். ராஜபக்ஷே அதிபரானதற்குப் பிறகு ஒன்பது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒரு பத்திரிகையாளர் காணாமல் போய்விட்டார். இலங்கையில் ராஜபக்ஷேயின் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமும், பத்திரிகையாளர்களும் என்ன கதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்குக் காட்டுகின்றன.

0 கருத்துக்கள் :